தொடர்கள்
பொது
தீபாவளி துக்கடா!! - அலேக் நிரஞ்சன்

2021100220445214.jpg

ரசிகர்களின் பிரார்த்தனை பலித்தது. அப்போ ‘அண்ணாத்த’ ஆட்டம் தீபாவளிக்கு உண்டு...

சிவப்பு அசுரனும் சீறிக்கிட்டு வராரு போலயே.....

நீட் தேர்வில் பல சர்ச்சைகள் வருகின்ற வேளையில்...
ஐஐடி பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி கண்டுள்ளார் (AIR 12175- JEE (advanced)) திருச்சியைச் சேர்ந்த அருண்குமார்!

IIT ஐதராபாத்-இல் பொறியியல் படிப்பு மேற்கொள்ளப் போவதற்கான செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது நீட் ட் ட் ட் டு.....!!

ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷன் இறங்கிருக்கலாமே என்று பத்திரிகையாளர்கள் கேட்க....

நீங்கள் சர்ச்சை உருவாக்குவதில் வல்லவர்கள், முன்பே சொல்லக் கூடாதா? என்று கிங் கோஹ்லி பதில் அளித்தார்...

ஆனா, நியூசிலாந்து கூட... கவுத்துடீங்களே கோலியன்னே ......

டி-20 உலகக்கோப்பை விறுவிறுப்புடன் செல்ல.... சற்று நாட்கள் முன் முடிந்த குரூப் போட்டியில் ஓமன் அணிக்கு பேட் களை செய்து கொடுத்துள்ளார் காஷ்மீரை சேர்ந்த கபீர் தர்... காஷ்மீர் வில்லோ எனும் மரத்தில் தான் கிரிக்கெட் மட்டைகள் தயார் செய்யப்படுகின்றன!!

அன்று கமலா இன்று அனிதா!

கனடா நாட்டின் அமைச்சரவையில் மாற்றம்....
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்பு!!

சமீபத்தில் இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதா சாகிப் பால்கே’ விருது தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது!!
அதைத் தன் நண்பரும்,பேருந்து ஓட்டுனருமான இராஜ் பகதூர் என்பவருக்கு சமர்ப்பித்துள்ளார்...

தலைவரின் நடிப்புக்கு முதல் அங்கீகாரம் கொடுத்து, நடிக்க வற்புறுத்தியதும் இவர்தானாம்!

அந்த ‘சிவப்பு கடுக்கன் போட்ட பாலகிருஷ்ணன்’...

போன வாரம் டெல்லி விமானநிலையத்தில், பிரபல நாட்டியக் கலைஞர் சுதா சந்திரனின் செயற்கை ‘கால்’ அகற்றி சோதனை செய்துள்ளனர் CISF!!

வருத்தத்துடன்... இதணை காணொளி மூலம் தெரிவித்த அவரிடம், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது CISF.

பறக்கும் ரயில் மாதிரி பறக்கும் பைக்-கும் வந்துவிட்டது.
ALI technologies எனும் நிறுவனம் X Turismo எனும் ஹோவர்பைக் (பறக்கும் பைக்!!) தயாரித்துள்ளது... இதன் மதிப்பு 5 கோடியே 10 லட்சமாம்! 4 பேட்டரி மோட்டார் மூலம் இயங்கும் இந்த பைக், 40 நிமிடத்தில் 100 கிலோமீட்டர் செல்லுமாம்!!

பறக்கும் பைக்.... ஹூடி பாபா.....

Ex-கணவருடன் எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் சமந்தா!!

இது தான் சோசியல் மீடியால பிரச்சனை...

மகிழ்ச்சியுடன் தீபாவளி இருக்கட்டும்!