தொடர்கள்
சினிமா
சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்

அடடா இப்படி பண்றீங்களே

20211003232550280.jpg

சமூக வலைத்தளத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நாயகனாக நடிக்கும் ‘அன்புச்செல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று விளம்பரம் வந்தது. இயக்குனர் பா. ரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் வெளியிடுவார்கள் என்றும் அதில் சொல்லி இருந்தார்கள். ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்ததும், நடந்ததுதான் பெரிய ட்விஸ்ட்.

20211003232611866.jpg

கௌதம் மேனனை எல்லோரும் பாராட்டி, வாழ்த்து சொல்ல... அவர் பேய் முழி முழித்து... படமா, நானா.. ஹீரோவா.. இது என்ன புது கரடி என்றார். அதன் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிப்பதாக கூறப்படும் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனரை எனக்கு தெரியாது, அவரை நான் சந்திக்கவும் இல்லை. என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே என்று புலம்பி இருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.

ஆனால் கொளதம்மேனன் அந்தப்படத்தில் நடிக்கிறார் என்று வீடியோ அனுப்பி இருக்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர்

உதயநிதி வாழ்க

20211003232511985.jpg

நவம்பர் 4-ஆம் தேதி முதலில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் மட்டும்தான் ரிலீஸ் என்றார்கள். இப்போது நடிகர் விஷால் நடிக்கும் ‘எனிமி’ படமும் ரிலீசாகுமாம். அப்படி இப்படி பேசி, 242 தியேட்டர்களில் வெளியிட சம்மதித்து விட்டார்களாம். வாழ்க உதயநிதி என்கிறார் விஷால். எல்லாம் அவர் தயவு தானாம். நடிகர் சங்க தலைவர், படத் தயாரிப்பாளர் சங்க தலைவர்... பேருதான் பெத்த பேரு, எல்லாம் உதயநிதியிடம் அடைக்கலம்.

அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

20211003232433126.jpg

தமிழ் சினிமாவில் நடிகர்களை சூப்பர் ஸ்டார், தளபதி, சின்ன தளபதி... இப்படி இன்னபிற பட்டபெயர்கள் சொல்லி அழைப்பது பழக்கம் வழக்கமாகி விட்டது. ஆனால், இப்போது மலையாளம், தெலுங்கு படவுலகில், நடிகர்கள் இந்த துதிப் பாடலை விரும்புவதில்லை. சினிமாவை, சினிமாவாக மட்டும் பாருங்கள் என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண், இவரை பவர்ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் அழைப்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் அழைக்காதீர்கள் என்று அடிக்கடி சொல்லி, தான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்பதையும் வெளிப்படையாக சொல்லி வந்தார் பவன்கல்யாண்.

சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, ரசிகர்கள் ‘பவர் ஸ்டார்’ ‘பவர் ஸ்டார்’ என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். வெறுத்துப் போனவர், நான் பவர் ஸ்டார் எல்லாம் இல்லை, அப்படி கூப்பிடாதீர்கள். கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சத்தமாக சொல்ல... அதன் பிறகு பவர் ஸ்டார் கோஷம் அடங்கிப்போனது.

ரசிகர்களுக்கு மொழி கிடையாது

20211003232408218.jpg

ராஜமவுலி கொஞ்சம் வித்தியாசமான டைரக்டர். தற்சமயம் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’. இதில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இந்தப் படம்... தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அவர் தனது படத்துக்கான நடிகர் தேர்வு பற்றி குறிப்பிடும்போது... தென்னிந்திய நடிகர், வடக்கத்திய நடிகர் என்று நான் நடிகர்களை பிரிப்பதை நிறுத்திவிட்டேன். அதற்கு முன்பே... நான் ரசிகர்களை அப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை. இந்திய ரசிகர்கள் என்றே நான் எல்லோரையும் பார்க்கிறேன். இதை நான் நீண்ட காலமாக கடைப்பிடிக்கிறேன் என்கிறார் இயக்குனர் ராஜமௌலி.

கன்னியாகுமரி புகழ் பாடும் நடிகை

20211003232347355.jpg

கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பு பற்றி குறிப்பிடும் பிரியா பவானி சங்கர் மகிழ்ச்சியுடன், கன்னியாகுமரி அற்புதமான நகரம். மக்கள், வானிலை, உணவு, ஊரின் அமைதி என்று கன்னியாகுமரியை புகழ்ந்து தள்ளி... ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.