தொடர்கள்
கற்பனை
கருத்து கதிர்வேலன்

20211003155230933.jpeg

பஞ்சாப், உபி தேர்தலில் பெரிய மாற்றத்தை காங்கிரஸ் ஏற்படுத்தும்... - சல்மான் குர்ஷித்

சார் எப்பவுமே தமாஷ் தான்


வாக்குரிமை இல்லாதவர்களுக்கும் உதவிகள்... - அமைச்சர் துரைமுருகன்

அப்படி சொல்லக்கூடாது கள்ள ஓட்டு போட யூஸ் ஆகும்


ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு... - பிரதமர் மோடி

சூரியன் என்று ஸ்டாலினை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கூட்டணிக் கட்சிகள் சீக்கிரம் அறிக்கை வெளியிடக் கூடும்.


ஒற்றுமையாக இருந்தால்தான் முன்னேறலாம்... - பிரதமர் மோடி

யாருக்கு கட்சிக்கா.. கூட்டணிக் கட்சிக்கா.. மக்களுக்கா... தெளிவா சொல்லலாம் இல்ல...


3800 கிலோ மீட்டர் தூரத்தை, 9 நாளில் சைக்கிளில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்த ராணுவ அதிகாரி.

பெட்ரோல் விலை உயர்வு பற்றி இவருக்கு எந்த கவலையும் இருக்காது.


ஆப்கானிஸ்தானத்தில் குண்டுவெடிப்பு

இனிமே குண்டு வெடிக்கலைன்னா என்றால் மட்டும் சொல்லுங்க... அதுதான் செய்தி.


திமுகவை போல் அதிமுக இரட்டை வேடம் போட்டதில்லை... - எடப்பாடிபழனிசாமி அறிக்கை

ஆமா, ஒன்லி சரண்டர் தான்.


எங்கள் கட்சியில் சேர வாருங்கள், மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு...

ரொம்ப அப்பாவி பிரதமர் போலிருக்கு.


லைகா குடும்பத்துக்கு சிறப்பு அனுமதி, பாமக தலைவர் மணி மீது குற்றச்சாட்டு.

எல்லாம் ஒதுக்கீடு முறையில் சிறப்பு அனுமதி இருந்திருக்கும் கண்டுக்காதீங்க.


நீராஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருது..

அப்புறம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததா செய்தி வரும் பாருங்க