தொடர்கள்
தீபாவளி ஸ்பெஷல்
கிருத்திகா ராதாகிருஷ்ணன் ‘ரெசிபி’! - மாலாஸ்ரீ

20211002205248927.jpg

தீபாவளி... அதிகாலையே எழுந்து கங்கா ஸ்நானம் பண்ணியாச்சு….

தீபாவளி பட்சணம் சாப்பிட தயாராக இருந்தாலும், நம்ம வீட்டு பாட்டிமார்....

அந்த கால தீபாவளி லேகியம் சாப்பிடனும் என்று கண்டிஷன் போட்டுட்டார்…

நம்ம வீட்டு வாண்டுகள், காலையிலே பலவகை வண்ண பட்டாசுகள் வெடிச்சு டயர்டா ஆகிட்டாங்க…

இனி என்ன… குடும்பத்தினர் அனைவரும் வீட்ல செஞ்ச, கடையில வாங்கின இனிப்பு, கார வகை பலகாரங்களை அப்படியே சாப்பிட்டு மகிழ்ச்சியில் திளைப்போம்.

ஒரே நாள்ல நம்ம வீட்டு வாண்டுகள் தீபாவளி பலகாரங்கள் அனைத்தையும் அப்படியே சாப்பிட்டு தீர்க்கும் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள்.

தீபாவளிக்கு இன்னும் 4 நாள் லீவு இருக்கே… புதுவகை ரெசிபி பண்ணலாம்னு நம்ம வீட்டு மாமிக்கு தோணும்.

முன்பெல்லாம் டிவியில் வரும் சமையல் கலை நிகழ்ச்சியை பார்த்தும், அதன்பின் யூடியூப் பார்த்து ரெசிபிகளை தயார் செய்வோம். தற்போது அம்மாதிரி நமக்கு ஆரோக்கியமான குடும்ப புதுப்புது ரெசிபிகள் உணவாக வழங்குகிறார் கீர்த்திகா ராதாகிருஷ்ணன்.

20211002205340843.jpg

பாலக்கடி, தவல வடை, கிவி பழ ஜாம், சிறுதானிய வெஜிடபிள் ரைஸ் - இப்படி பல சுவையான குக்கீஸ், கேக் மற்றும் பான் டிரபிள் ரெசிபி உணவுகளை நாம் எப்படி வீட்டில் சுவையாக தயாரிப்பது என தூர்தர்ஷன் உட்பட பல தனியார் தொலைகாட்சிகளில் ரெசிபி உணவுகளை செய்முறை எளிதாக சொல்லி கொடுத்து பிரபலமானவர் கீர்த்திகா ராதாகிருஷ்ணன்.

கீர்த்திகா ராதாகிருஷ்ணனின் தந்தை பிரபல நரம்பியல் நிபுணர் வி.நாகராஜன். இவரது கணவர், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவர்களின் மகன் அரவிந்த்தும் டாக்டர்.

20211002205408140.jpg

எந்த ஒரு சமையல் சார்ந்த தொலைகாட்சி நிகழ்ச்சியையும் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே செய்யக்கூடாது. மக்களின் ஆரோக்கியத்தையும் மனதில் கொள்ள வேண்டும். மக்களால் செய்யக்கூடிய சத்தான உணவு வகைகளை செய்து காண்பிக்க வேண்டும்! எந்த ஒரு உணவையும் அதன் தயாரிப்பில் கடைசி மூன்று கட்டங்களை கவனத்துடன் செய்தால், 5 ஸ்டார் ஓட்டல் தயாரிப்பை விட நமது வீட்டில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் சூப்பராகவும் ஆரோக்கியமாகவும் சத்தாகவும் இருக்கும் என்கிறார் கிருத்திகா ராதாகிருஷ்ணன் புன்முகத்துடன் வரவேற்றவர்.

20211002205841137.png

இத்தகைய சிறப்புமிக்க கிருத்திகா ராதாகிருஷ்ணனை நேரில் சந்திதோம்…

நாம் கேட்ட கேள்விகளுக்கு, அவரது ரெசிபிகளை போலவே மிகச் சுவையாகவும் ரத்தின சுருக்கமாகவும் பதிலளித்தார்.

விகடகவி: தற்போது நிரந்தர வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில், புதிய பட்டதாரிகள் சுயதொழில் துவங்கும் வகையில், இந்தச் சமையல் குக்கீஸ், கேக் மற்றும் பான் டிரபிள் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவீர்களா?

கிருத்திகா ராதாகிருஷ்ணன்: நிச்சயமாக, இன்றைய இளைஞர்கள் பலவித திறன்களும் பெற்றிருப்பது முக்கியமான ஒன்றாகும். சமைப்பது என்பது வாழ்க்கைக்கான திறனாகும். ஆகவே, அதன் அடிப்படைகளை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. அவர்களுக்கு அதன்மீதான ஆர்வமும், ஈர்ப்பும் இருக்குமானால், அது ஒரு சிறப்பான வேலையாகும், திருப்தியை தரும். அதே நேரத்தில், அவர்களுக்கு வளமான எதிர்காலம் கொண்ட ஒரு துறையாகவும் இது மாறும்!

விகடகவி: கணவர், நீங்கள், மகன் - மூன்று பேருமே படுபிஸி... ஓய்வுநேரம் கிடைக்குமா? கிடைத்தால், மூன்று பேரும் அதை எப்படி பயன்படுத்துவீர்கள்?

கிருத்திகா ராதாகிருஷ்ணன்: எப்போதாவது அதுபோல் நேரம் அமையும். நிச்சயமாக ஒன்றாய் அமர்ந்து பேசி மகிழ்வதுண்டு.

விகடகவி: நண்பர்கள், உறவினர்களுடன் தீபாவளி கொண்டாடுவீர்களா?

கிருத்திகா ராதாகிருஷ்ணன்: எல்லோரும் சேர்ந்து கண்டிப்பாக தீபாவளி கொண்டாடுவோம். தீபாவளி அன்று காலையில் நாங்கள் மூவருமே எப்படியாவது ஒரு வெடியாவது வெடித்துவிடுவோம்.

விகடகவி: வாழ்க்கையில் முன்னேற, இன்றைய இளம் தலைமுறையினர் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வீர்கள்?

கிருத்திகா ராதாகிருஷ்ணன்: வாய்ப்புகள் மிகவும் முக்கியமானவை, நமக்கு கிடைக்கும் வாய்ப்பை தவற விடவே கூடாது. முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் முன்னேற பொறுமை என்பது மிகவும் அவசியமான ஒன்று.

விகடகவி: தீபாவளி இனிப்பு வகைகளுக்கு மாற்றாக, என்னென்ன கேக், குக்கீஸ் ரெசிபி வகைகளை பயன்படுத்தலாம்?

கிருத்திகா ராதாகிருஷ்ணன்: பியூஷன் கேக்ஸ், ரசமலாய் கேக், குலாப் ஜாமூன் கேக், ரசமலாய், ட்ரஸ் லீச்செஸ் கேக், குலாப் ஜாமூன் டிராஃபிள்ஸ், ரசகுல்லா டிராஃபிள்ஸ், இந்திய சுவையில் பியூஷன் குக்கீஸ்... இப்படி பல இருக்கு.

விகடகவி: நீங்கள் செய்யும் ரெசிபி வகைகளில், உங்கள் கணவருக்கும் மகனுக்கும் மிகவும் பிடித்தவை எது?

கிருத்திகா ராதாகிருஷ்ணன்: பல்ருசியுள்ள பாலக்கடி. மிகவும் பிடித்த கேக் - லிச்சீ ரோஸெட்கேக், ப்ளாக் பாரஸ்ட் கேக், ப்ளம் கேக், பக்லவா, பான் கோவா டிராஃபிள்ஸ் உள்பட நான் எந்த உணவு வகை செய்தாலும், அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்!

விகடகவி: கொரோனா தொற்று பரவல் காலகட்டங்களின்போது, உங்கள் கணவர் தொடர்ந்து மக்களின் மருத்துவ சேவைகளுக்காக இடையறாது பணியாற்றினார், அச்சமயங்களில் அவரது உடல்நிலை, பாதுகாப்பு குறித்து, உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?

கிருத்திகா ராதாகிருஷ்ணன்: நிச்சயமாக கவலையோடுதான் இருந்தேன். அதனால் நாங்கள் எல்லா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். கொரோனா முதல் அலையின்போது, நாங்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் மூவரும் குளித்துவிடுவோம். வீட்டின் எல்லா கதவுகளின் கைப்பிடியையும் சானிடைசர் கொண்டு துடைத்து, பின்னரே உபயோகிப்போம். தற்போதும் மக்கள் முக கவசம் அணிந்து, சமுக இடைவெளி கடைபிடித்து, அரசின் வழிகாட்டுதல் படி நடந்தால் இந்த கொரோனாவை நம்மை விட்டு விரட்டலாம்..

விகடகவி வாசகர்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்...