தொடர்கள்
தீபாவளி ஸ்பெஷல்
“அதிரசம்" - ஸ்வேதா அப்புதாஸ்

பண்டிகைகள் எல்லோருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் ஒன்று...
நம் நாட்டில் தான் நிறைய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன... அதில் மிக முக்கியமான பண்டிகை தீபாவளி...

20211002135244921.jpg
தீப திருநாள்... தீபங்கள் ஏற்றப்பட்டு... பட்டாசு வெடிக்கப்பட்டு... மத்தாப்பு... பூச்சட்டி... சங்கு சக்கரம்.. என்று அருமையாக தீபாவளி கொண்டாட... அதனுடன் பல வகை பலகாரங்கள் தயாரிக்கும் பாக்டரியாக மாறும் கிச்சன், இன்று காணாமல் தான் போய்விட்டது.
எல்லாம் ரெடி மெட். பலகாரங்களை கடையில் வாங்கி, தீபாவளியை கொண்டாடும் காலம்.

அதிலும் கொரோனா வந்தவுடன் அந்தப் புத்துணர்ச்சியும் காணாமல் போனது...

இந்த வருட தீபாவளி தான் சற்று கலக்கலாக இருக்கிறது... எத்தனையோ பலகாரங்கள் தயாரித்தாலும், அதிரசத்தை பின்னுக்கு தள்ள முடியாது. பல வருடங்களாக தீபாவளி பலகார வகைகளில், அதிரசத்தை மிஞ்ச எந்த பலகாரங்களும் இல்லை. அம்மா, பச்சை அரிசியை கழுவி, பாதி காய வைத்து அதில் எள்ளு, கசகசா, சேர்த்து உரலில் இடித்து மாவாக்கி... அதில் சர்க்கரை அல்லது மண்டை வெல்லம் பாகை சேர்த்து பிசைந்து அதிரசம் சுடுவது ஸ்பெஷலான ஒன்று....

20211002143535165.jpg
அதிலும்... அதிரசம் அம்மா சுட்டெடுக்க... அதற்குரிய தட்டையான கட்டையால் அமுக்கி எண்ணெய்யை பிழிந்து வைக்க, அதிரசம் ரெடி.
அம்மாவுக்கு தெரியாமல் கப்சிப் என்று சுவைத்து பார்ப்பதில் இருக்குமே ஒரு அலாதி சொல்லவே வேண்டாம்...

தற்போது எல்லாம் காணாமல் போய்விட்டதோ என்ற பிரம்மை... பல வீடுகளில் இருந்த உரல் மற்றும் உலக்கை காணாமலே போய்விட்டது. பாட்டி, அம்மா உபயோகித்த இவை எங்கே என்று தேடும் அளவுக்கு இருக்கிறது.

நாமும் உரல், உலக்கையை தேடி சிலரை தொடர்பு கொண்டோம்.... பல வீடுகளில் இருந்த உரல், உலக்கை மிஸ்ஸிங்.

20211002143809713.jpg
கடைசியில் மஞ்சைக்கம்பை என்ற கிராமத்தில் கண்டு பிடித்து, நம் விகடகவி வாசகர்களுக்கு அதிரச ஸ்பெஷலுக்காக படத்தை பிடித்தோம்...

உரலையும், உலக்கையையும் மறந்த தாய்மார்களுக்கு, இன்று அதிரச மாவு அரைக்கும் மெஷின் வந்து விட்டது.


அரிசியை ஊறவைத்து, உலர்த்தி கொண்டு போய் கொடுத்தால்... சிறிது நேரத்தில் அதிரச மாவு ரெடி. படு ஈசியாக வேலை முடிந்த திருப்தியில், தீபாவளி அதிரசம் ரெடியாகி விடுகிறது.

வேலைக்கு செல்லும் பெண்கள்... ரெடி மேட் அதிரச மாவை வாங்கி வந்து, ஈசியாக அதிரசத்தை சுட்டு அசத்தி விடுகிறார்கள்...

20211002144326299.jpg
நாமும் விகடகவிக்காக ரெடி மேட் மாவை வாங்கி, அதிரசத்தை ரெடி செய்தோம்....

மாவு மில் நடத்தும் மனோஜிடம் பேசினோம்...

2021100214450277.jpg
“தீபாவளி பண்டிகை சமயத்தில் தான், பெரும்பலான வீடுகளில் அதிரசம் சுடுகிறார்கள். அதிலும் ரெடி மேட் மாவு வாங்கி சுடுவது, வழக்கமாகி விட்டது. பழைய ஸ்டைல் உரலில் மாவு இடித்து சுடுவது, பாட்டி காலத்து தயாரிப்பு. இப்பவெல்லாம்... குடும்பத் தலைவிகள் எங்க மெஷினை நம்பி தான்...

20211002144704508.jpg

பண்டிகை காலத்தில் இருபது கிலோ வரை அரைத்து கொடுக்கிறோம்.... அதிரச மாவு அரையும் போது, வரும் வாசமே அதிரசத்தின் மேல் ஆசை வந்து விடும். அதிரசம்... அதிரசம் தான்” என்று முடித்தார்.

தீபாவளி ஸ்வீட் ஸ்பெஷல் கடைகளில்... அதிரசம் விற்கப்படுகிறது... என்னதான் ஸ்வீட்டாக இருந்தாலும்... நம்ம பாட்டிகள், அம்மாக்கள் உரலில் அதிரச மாவை இடித்து, பக்குவமாக வெல்ல பாகை காச்சி மிக்ஸ் செய்து, சுடும் அதிரசம் தீபாவளியின் சூப்பர் பலகாரம்.