தொடர்கள்
தமிழ்
எமதினிய தமிழ்ச் சொற்களை இழக்காமல், மீட்டெடுப்போம்... - 22 - இரா.சு.இராசன்

20211003165841629.jpeg

பொருள் ஒன்று பல சொற்கள் என்பதொன்றும் தமிழுக்குப் புதியதல்ல. எல்லை கடந்தும் நம் தமிழ் அரசாளக்காண் பதிலே மகிழ்ச்சி நமக்கு மிக. எடுத்துக் காட்டாய் நாம் அடிக்கடி பயன் பாட்டில் கொள்ளுகின்ற ஒரு சொற்றொடரைப் பார்ப்போம்...

“அரசியல்வாதிகளின் தலையீட்டால் இந்த வழக்குத் தாமதமாகிறது” என்றுரைப்பது இதே சூழலில் மலையாளத்தில் “தலையீடு” என்ற சொல்லுக்கு நிகராக “இடைப் படுதல் என்ற பொருளில் இடபட்டதால்” என்ற சொல் பயன் பாட்டில் உள்ளது.

ராஷ்டிரீயக் காரர்களுடே இடபாட்டால் ஈ கேஸ் நடபடி தாமசிக்குந்நு “என்கிறார்கள், அவர்கள்.

தலையிடுதலும், இடைப்படுதலும் ஒரே பொருள் தான். இரண்டுமே தமிழ்ச் சொற்கள்.

அழிமதி

நாம் “ஊழல்” என்று சொல்லுமிடத்து அவர்கள் “அழிமதி” என்ற தமிழ்ச் சொல்லே பயன் படுத்துகிறார்கள்.

பனி

பல தமிழ்ச் சொற்கள் நாம் அறிந்த பொருளிலே தான் மலையாளத்தில் பயன்பாட்டில் உள வென்று கண்டோம்.

மாறாகச் சில சொற்கள் நேர் எதிர் மாறான பொருள் தருமாறு அங்கு வழங்குவது காணின் நகையுணர்வு தான் ஏற்படும்.

அவைகளில் ஒன்று ‘பனி’ சொல்லாகும்.

நமக்குப் ‘பனி’ என்றால் குளிர் சார்ந்த சொல்லாகும்.

அங்கு தலை கீழ்ப் பொருளாக பனிக்கிறது என்றால் காய்ச்சல் அடிக்கிறது என்று பொருள்.

எனிக்கு ரண்டு திவசமாயிட்டு பனி. ஜோலிக்கு போயில்லா.

இதற்கு “எனக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல் (சுரம்) வேலைக்குப் போகவில்லை” என்று பொருள்.

(மேலும் தொடரும் இந்தச் சொல் தேடல்)..