தொடர்கள்
தீபாவளி ஸ்பெஷல்
"கன்னட ராஜ்குமார் பத்து சிவாஜிக்கு சமம்.." - டெல்லி கணேஷ் ஜாலி பேட்டி... தீபாவளி சிறப்பு சந்திப்பு... - ராம்

20211003194030499.jpg

சில வருடங்களுக்கு முன் ஹாங்காங் வந்ததிலிருந்தே, மிகச் சிறந்த நண்பராகி விட்டார் திரு.டெல்லி கணேஷ்.

பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல், அனைவரிடமும் அன்போடும் உரிமையோடும் பழகும் தன்மையுடையவர். அதிர்ந்து பேசாதவர்.

திரைக்குப் பின் அவர் அடிக்கும் லூட்டிகள் மணிக்கணக்கில் ரசிக்கத் தகுந்தவை.

தீபாவளி ஸ்பெஷலுக்கு ஒரு சிறப்பு பேட்டி ‘விகடகவி’க்கு என்றதும்... உற்சாகமாக ஒப்புக் கொண்டார்.

கரொனா காலத்தில் ஜூம் ஒரு வகையில் வசதி என்றாலும் சில சமயங்களில் படுத்தி விடுகிறது.

இன்றைய ஜூம் ஒழுங்காக போய் கொண்டிருந்த போது, கொஞ்சம் எதிரொலி வந்து விட்டது எதிர்பாராதது.

இருந்தாலும்... பேட்டியின் போக்கையும் சுவாரஸ்யத்தையும் அது அவ்வளவாக பாதிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இனி டெல்லி கணேஷுடன் ஒரு ஜாலியான நேர்முகம்.......