
மடல் - எங்கே... என்றேன்...?
“என் மனதில் புதைந்துள்ளதை...
உன் மனதால் படி...” என்கிறாய்...!
கனவு - எங்கே... என்றேன்...?
“என் விழிகளில் பதிந்திருப்பதை...
உன் விழிகளால் பார்...” என்கிறாய்...!
கவிதை - எங்கே... என்றேன்...?
“என் இதழ்களில் குவிந்திருப்பதை...
உன் இதழ்களால் எடுத்து எழுது...” என்கிறாய்...!
காலம் - எங்கே என்றேன்...?
“நம் கண் அருகில்...
நிகழ்வில் நிறுத்தி இருக்கிறேன்...” என்கிறாய்...!
உலகம் - எங்கே... என்றேன்...?
“உன் அருகில்... நான்...
என் அருகில்... நீ...” என்கிறாய்...!
காதல் - எங்கே...என்றேன்...?
“காதலே... காதலிடம்...
காதலில்... தேடுகிறது...” என்கிறாய்...!
வினா ஏதுமில்லாமல்... நான்...!
விடைகளுடன்... நீ...!
மௌனமாய்... நாம்...!

Leave a comment
Upload