தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 40 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250719105650694.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

திரு ராமகிருஷ்ணன், அமர் சேவா சங்கம்

திரு ராமகிருஷ்ணன் அவர்கள் கடந்த பல வருடங்களாக அமர் சேவா சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். முக்கியமாக ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு மையமாக திகழ்கிறது இந்த மாபெரும் நிறுவனம். அவர் தான் ஸ்ரீ மகா பெரியவாளை சந்தித்து ஆசி பெற்றது குறித்தும், ஸ்ரீ சிவன் சாரை சந்தித்து ஆசி பெற்றது குறித்தும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.