தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250722195550825.jpeg

பாஜகவின் தலையாட்டி பொம்மை எடப்பாடி பழனிச்சாமி, செல்வப் பெருந்தகை.

நீங்க யாரோட தலையாட்டி பொம்மை ?

இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் முதல்வரை ஆலோசித்த பின் பதில் சொல்கிறேன் கமலஹாசன் எம்பி பேட்டி.

ஆமா எல்லாம் முறையா இருக்கணும் !!

அதிமுக பலவீனம் ஆகிவிட்டது. அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரி செய்ய முடியும். அந்த அனுபவசாலி நான் தான் சசிகலா.

ஜெயிலுக்கு போன அனுபவத்தை சொல்றாங்க !!

பீகாரில் ஒரு வாக்கை கூட திருட அனுமதிக்க மாட்டோம் ராகுல்காந்தி.

ஆமா ,அதெல்லாம் உங்க வேலை!!

அரசியல் நகர்வுகளை நாங்களே தீர்மானிப்போம் திருமாவளவன்.

பல சமயம் நீங்க நகராமயே ஒரே இடத்தில் இருக்கீங்க !!

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போனவர்கள் செழிப்பாக இருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி.

அண்ணே நீங்களே நம்பக் கட்சிக்காரங்களுக்கு ரூட் போட்டு தரீங்க !!

சிபி ராதாகிருஷ்ணன் விஷயத்தில் ஸ்டாலின் முடிவு தான் எங்கள் முடிவு வைகோ.

உங்கள் கட்சியோட முடிவு செய்கிற அதிகாரம் அவர்கிட்ட தானே இருக்கு !!

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் எடப்பாடி அஞ்சுகிறார் மா.சுப்ரமணியம் கருத்து.

நீங்க தான் எடப்பாடி பார்த்து பயப்படுற மாதிரி தெரியுது !!

பாஜகவில் சேர முக்கிய திமுக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் எல்.முருகன்.

சும்மா அடிச்சு விடுங்க !!

ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை நிதிஷ்குமார்.

தமிழ்நாட்டில் தானே தலைவரே !!

திமுகவில் உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி.

உங்க கட்சி பற்றி கூட ஓபிஎஸ் அப்படித்தான் சொல்றாரு !!

தேர்தல் ஆணையத்தை பாஜக கீ கொடுத்தால் ஆடும் பொம்மை ஆக்கிவிட்டது முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் ஆணையத்துக்கு நீங்க கீ கொடுத்து ஜெய்ச்சிட்டீங்க போல தெரியுது !!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் திட்டவட்டம்.

ஆனால் சாயந்திரம் அறிவாலயம் மட்டும் போவிங்க விளக்கம் சொல்ல !!